சுகுது பிராந்தியம்
சுக்ட் மாகாணம்
Вилояти Суғд | |
---|---|
தஜிகிஸ்தானில் சுக்ட் | |
ஆள்கூறுகள்: 39°30′N 69°0′E / 39.500°N 69.000°E | |
நாடு | தஜிகிஸ்தான் |
தலைநகரம் | குஜந்த் |
பரப்பளவு | |
• மொத்தம் | 25,200 km2 (9,700 sq mi) |
மக்கள்தொகை (2020)[1] | |
• மொத்தம் | 27,07,300 |
• அடர்த்தி | 110/km2 (280/sq mi) |
ஐஎசுஓ 3166 குறியீடு | TJ-SU |
ம.மே.சு. (2017) | 0.659[2] medium |
சுக்ட் பிராந்தியம் (Sughd Region, தாஜிக் மொழி : Вилояти Суғд ) என்பது தஜிகிஸ்தானின் நான்கு ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றும், மூன்று பிராந்தியங்களில் ஒன்றாகும். வரலாற்று சோக்தியானாவை மையமாகக் கொண்ட இது, நாட்டின் வடமேற்கில் 25,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், 2,707,300 (2020 மதிப்பீடு) மக்கள் தொகையையும் கொண்டுள்ளது, 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,233,550 ஆகவும், 2000 ஆம் ஆண்டில் 1,871,979 ஆகவும் இருந்தது. இதன் தலைநகரம் குஜந்த் (முன்னர் லெனினாபாத்) ஆகும். இது சோவியத் உஸ்பெக்கின் ஒரு பகுதியாக 1924 இல் இது நிறுவப்பட்டது. மேலும் 1929 இல் சோவியத் பொதுவுடைமையாளர்களால் சோவியத் தாஜிக்குக்கு மாற்றப்பட்டது. இன்று, இப்பகுதி இன்னும் பல உஸ்பெக்கியர்களின் தாயகமாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில் பிராந்தியத்தின் இன அமைப்பு 84% தாஜிக்குகள், 14.8% உஸ்பெக்கியர், 0.6% கிர்கிஸ், 0.4% உருசியர் மற்றும் 0.1% தாதர்கள் என இருந்தது.[3] இப் பிராந்தியத்தின் எல்லகளாக உஸ்பெகிஸ்தானின் ஜிசாக், நமங்கன், சமர்கண்ட், பெர்கானா பிராந்தியங்கள் மற்றும் கிர்கிஸ்தானின் ஓஷ் மற்றும் பேட்கன் பிராந்தியங்கள் உள்ளன. சிர் தாரியா ஆறு இதன் வழியாக பாய்கிறது. இதில் ஆகாஷ் மாசிஃப் மற்றும் மொகோல்டோ மாசிஃப் போன்ற முக்கியமான பறவை வாழிடங்கள் உள்ளன . தஜிகிஸ்தானின் மற்ற பகுதிகளிலிருந்து கிஸ்ஸர் மலைத்தொடரால் சுக்ட் பிரிக்கப்படுகிறது (குளிர்காலத்தில் கணவாய்களும் அடைபடலாம்). இப்பகுதியின் தெற்கு பகுதி மேல் ஜராஃப்ஷன் ஆற்றின் கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு ஆகும். துர்கெஸ்தான் எல்லைக்கு மேலே வடக்கு, பெர்கானாப் பள்ளத்தாக்கு உள்ளது. இப்பிராந்தியமானது தஜிகிஸ்தானின் மக்கள் தொகையில் 29% எண்ணிக்கையையும், நாட்டின் விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது.[4] இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியை செய்கிறது.[5]
இப்பிராந்தியம் 1991 வரை லெனினாபாத் என்றும், பின்னர் 2000 வரை லெனினோபாட் என்றும், 2004 வரை சோக்ட் என்றும் அழைக்கப்பட்டது.
பொருளாதாரம்
[தொகு]2008 ஆம் ஆண்டில் சராசரியாக 13.2% மற்றும் 2009 இல் 13.3% என்ற விகிதத்தில் சுக்டின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது.[6] 2009 ஆம் ஆண்டில், வேளாண்மை, வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றில் சுக்டின் ஜிஆர்பியானது (மொத்த பிராந்திய தயாரிப்பு) முறையே 28.2%, 25.8%, 14.0% என்று இருந்தது. 2000 ஆம் ஆண்டிலிருந்து, தொழில்துறை உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்தது, ஆண்டுக்கு சராசரி வளர்ச்சி 5-8% என்ற விகிதத்தில்.
பிராந்தியத்தில் சுக்ட் தடையற்ற பொருளாதார மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டுள்ளது.
நகரங்கள்
[தொகு]சுக்ட் பிராந்தியம் பின்வரும் 8 மாவட்ட அளவிலான நகரங்களைக் கொண்டுள்ளது (2020 ஆம் ஆண்டு மக்கள்தொகை மதிப்பீட்டில்):
- பஸ்டன் (ச்கலோவ்ஸ்க்) (34,000)
- குலிஸ்டன் (கெய்ரகம்) (18,000)
- இஸ்ஃபாரா (51,700)
- இஸ்தரவ்ஷன் (உரா-டியூப்) (65,600)
- இஸ்திக்லோல் ( தபோஷர் ) (17,600)
- குஜந்த் (லெனினாபாத்) (183,600)
- கொனிபோடோம் (52,500)
- பஞ்சாகென்ட் (43,300)
மாவட்டங்கள்
[தொகு]பிராந்தியமானது 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( Tajik , Nohiya ). மேலும், பல மாநகரங்கள் ( ஷாஹ்ர் ) மற்ற நகரங்களையும் ( ஷாஹ்ராக் ) மற்றும் கிராமப்புற பகுதிகளையும் உள்ளடக்கியது. இவை "நகர மாவட்டங்களின்" கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுக்ட் மாவட்டங்கள்
[தொகு]- அஷ்ட மாவட்டம்
- அய்னி மாவட்டம்
- தேவாஷ்டிச் மாவட்டம்
- கஃபுரோவ் மாவட்டம்
- குஹிஸ்டோனி மாஸ்ட்சோ மாவட்டம்
- மாஸ்ட்சோ மாவட்டம்
- ஸ்பிடமென் மாவட்டம்
- ஜாபர் ரசூலோவ் மாவட்டம்
- ஷாஹரிஸ்டன் மாவட்டம்
- ஜாபரோபோட் மாவட்டம்
நகர மாவட்டங்கள்
[தொகு]- பஸ்டன்
- இஸ்ஃபாரா
- இஸ்தரவ்ஷன்
- கொனிபோடோம்
- பஞ்சகென்ட்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population of the Republic of Tajikistan as of 1 January 2020" (PDF) (in ரஷியன்). Statistics office of Tajikistan. Archived from the original (PDF) on 1 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "CensusInfo - Data". www.censusinfo.tj. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.
- ↑ Agriculture of the Republic of Tajikistan, statistical yearbook,State Statistical Committee, Dushanbe, 2008
- ↑ Robert Middleton and Huw Thomas, 'Tajikistan and the High Pamirs', Odyssey Books, 2008, page 166
- ↑ Socio-economic situation of the Sughd oblast, Statistics Committee of Sughd oblast, Khujand: January–March 2010 (in Tajik and Russian)